நான் சிபேஷ் கதைக்கிறன்


ஹாய் பிரண்ட்ஸ், எப்படி சுகம்?
நான் பிறந்து இன்றோடு 12 நாளாச்சு. இன்றைக்கு என்ற அம்மாட அலுவலக நண்பர்கள் எல்லாம் வந்தினம். தமிழ், சிங்கள, இசுலாமியர் என்று ஏகப்பட்ட பேர். எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? எல்லோரும் என்னை கொஞ்சினினம் தெரியுமா?
என்ற அம்மா நான் கருவரையில் இருக்கும் போது நல்லா இறால் நண்டு என்று சாப்பிட்டிருப்பாப் போல கிரந்தியால கைகால் எல்லாம் அலுப்பா இருக்கு. கொப்புளம் வேற. அம்மா நீ கொஞ்சம் வாயைக் கட்டி இருக்கனும்.

அப்பா நீங்க அலுவலக வேலையெல்லாம் அலுவலகத்தில முடிச்சிப் போட்டு வீட்டில வந்தா என்னக் கொஞ்சுங்க... உங்கட சீனியர் ஒப்பிசருக்கு கொஞ்சம் சொல்லுங்க பிளீஸ்....

சரி இரவாச்சி இனியாவது கொஞ்சம் தூங்கனும் வரட்டுமா பிரண்ட்ஸ்....?

Comments