எனது முதலாவது பொங்கல் விழா

வணக்கம் பெரியோர்களே, என் இனிய நண்பர்களே! (தூய தமிழை உபயோகிக்கும்படி அப்பா சொல்லுறார்...அதுதான் ஹாய் பிரண்ட்ஸ் என்பதை தவிர்த்திட்டன்)

நாளை தைப்பொங்கலாம். எனக்கு இது முதலாவது பொங்கல்... பார்ப்பம் எப்படி இருக்குமென்று... இந்த நேரத்தில உங்கள் எல்லோருடனும் பொங்கல் திருநாள் மற்றும் தமிழர் புதுவருட வாழ்த்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
எனக்கு தான் பொங்கல் சாப்பிட இயலதே. நீங்கள் எல்லாம் சாப்பிடுங்க... அடுத்த வருடம் நானும் உங்களுடன் பொங்கல் சாப்பிடுவன்.

Comments